பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் பணம்விரிக்கக் கடைவிரித்துப் பகல்முழுதும் பொய்விரித்துச் சுரண்டு கின்ற குணம்விரிந்த முதல்விரிந்தார் பாய்விரித்துத் துயில்விரிக்கும் இரவென் ருலும், தணல்விரிந்த தெனஅல்லி இதழ்விரிக்க, முல்லைதன் முகைவி ரித்து மணம்விரிக்க, முழுநிலாதன் கதிர்விரிக்கும் இரவென்ருல் இனித்தி டாதோ ? அறிவுதரும் படிப்பின்றி அன்பர்களின் பேச்சின்றி உணவு மின்றிச் செறிவுதருங் கலையின்றிச் செழிப்பான செயலின்றிப் பயனு மின்றி வறிதெனவே கழிகின்ற இரவெனினும் 'பாலாறிப் போகு" தென்னுங் குறிகாட்டி அறைக்குள்ளே அவளழைக்கும் இரவென்ருல் இனித்தி டாதோ ? (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள். ) 130