பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். நாவல ர் இரா. கெடுஞ்செழியன் M.A., M.I.A. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : அரிய, இனிய, எளிய, சிறந்த கவிதைகளைப் பொழி வதில் வல்லவர் கோவை, இளஞ்சேரன் அவர்கள் ஆவர் என்பதை நாடு நன்கு அறியும். அவருடைய கவிதைகளில் கவர்ச்சி உண்டு; சுவை உண்டு; இன்பம் உண்டு. இக்கவிதையிலே வரும் தலேவன்தலைவியின் உரையாடலிலே காதல் காலூன்றிக் கொஞ்சி விளையாடுவதையும் மொழிக்கருத்து மிளிர் விதையும் காணலாம், வாழ்க கவிதையுள்ளம் ! (ஒ-ம். இரா. நெடுஞ்செழியன். கையிலொரு தாலியுடன் வருவேன் கண்ணே! தலைவன் : வெப்பத்தால் நலிந்தவன விலக்கி விட்ட விரைமலர்த்தீம் பொய்கையதைக் கண்டே னில்லை; கப்பியதோர் பசிகொண்டோன் கலங்கி கிற்கக் கனிமரங்தான் தடுத்ததெனக் கேட்டே னில்லை; 'தப்பத்தான் நம்மணத்தைத் தள்ளி வைத்தல்; தவிக்கின்றேன் அறியீரோ என்ற நீயே ஒப்பத்தான் மறுக்கின்ருய் மணத்திற் கின்றே: ஒண்டொடியே. தடையென்ன கண்டாய் கண்ணே ! 135