பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் கொல்லி மலேசேரத் தாவி, உயிர் கொல்லும் இசையினில் கூவி, செல்லும் வழியினில் தோற்பாய், - ஒரு செல்வி குரலுக்கு வேர்ப்பாய் ! கெல்லியென் உயிரில் பாதி - வாரிக் கொண்டவள். அவளென் தாதி மெல்லியல் தனக்குச் சேதி - இசை மெருகொடு சொல்லிப் போதி ! சென்றவர் மீள்திசை நோக்கி - உயிர் செல்வதை ஈர்த்துகான் தேக்கிப் பொன்றிடும் வாயினில் உள்ளேன் - துணேப் பேடையே, கண்டாயோ; விள்ளாய் : ' என்றுனேக் கேட்பது முறுதி - அவட் கிதனைச் சொல்லிது மிறுதி: 'தென்றமிழ் யாவினும் ஆளும்; அவள் தெள்ளுடற் கென்னின்பம் மீளும்'. (ஆடிதோறும் இடையே ஒாகைக்கூன் பெற்ற அறுசீர் விருத்தச் சந்தப் பாட்டு.) 144