பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் வெட்டுங் கருவிழி, கொட்டு மழகுகல் வள்ளியெ னும்பண்ணைப் பள்ளிதரும் மொட்டெனும் பார்வையைச் சட்டெனக் கண்டனன் மெல்லக்கு றிகாட்டிக் கொல்லைபுக்கான். சிட்டுப்ப றப்பெனக் குட்டிய வள்ளிதழ் சிந்துஞ் சிரிப்புடள் வந்துகின்ருள்: தொட்டனன் தீட்டொன்றுஞ் சுட்டதில் லயவள் தொத்தினள் தோளினில் முத்தமிட்டான். சித்திரைத் திங்களில் நத்திய தாமிந்தச் 'சின்னவி ளையாடல் வண்ணமுற்றே முத்தனை யாளிடம் வித்தும்மு &ளக்கால் மேனி பசந்தனள் ஆனியிலே. "கொத்திய தென்னடி தொத்துநோய்' என்றப்பன் கொக்கரித் தான்.வள்ளி கக்கிவிட்டாள்; கத்தியும், கன்னியும் ஒத்தெடுத் தேகுறள் கற்றவர் தம்மையே பற்றவந்தான். 148