பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் செந்தமிழ்க்காவலர் டாக்டர். அ. சிதம்பரங்ாதனர் M. A., Ph. D., M. L. C. (தலைமைப் பேராசிரியர், ஆங்கில-தமிழ் அகராதித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.) வழங்கிய மதிப்புக் கருத்துரை : மாந்தர் சொல்லாலும், செயலாலும் வேருவர் என்பதனையும், கவிஞர் கற் பனையுலகு நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாது என்பதனையும் கவிஞர் இக் கவிதையால் விளக்குகிரு.ர். இக் கவிதையில் அடுத்தடுத்துப் பலவித மெய்ப்பாடுகள் செவ்விதிற் புலப்படு கின்றன. (ஒ-ம்.) அ. சிதம்பரநாதன். மந்தைக் கரையில். சாணியைப் பொறுக்கிவருங் குட்டி - உன் சாண்முகத்தில் ஏதுதங்கக் கட்டி ? கோணியே குலுங்குமுன்றன் கன்னம் - எனக் கொல்லுதற்குக் கொண்டதுவோ எண்ணம் ? வாணியை வடிக்குமிதழ் உண்ண - அடி வாய்பிளந்து யானுனேயே நண்ன, காணியே குனிவதேனே கண்ணே ? . உ&ன கத்துதற் குயிர்பொறுத்தேன் பெண்ணே ! 150