பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் கவிதை ஒரு குமரி, கன்னித் தன்மை பொலியும் குமரி. கவிஞன் அக் குமரி யின் அம்மையப்பன். அந் நிலை வழு வாது குமரியைப் பேணவேண்டும். பேனுபவனே கவிஞன், பேணப் படுவதே கவிதை. கவிதைக் குமரி. செஞ்சொல்லே பஞ்சுடலாய்ச் செழும்யாப்பே உயிரதுவாய் அஞ்சுவையும், அருநயமும் அழகாடை - மேகலையாய்ப் பொன்னன்ன நுண்பொருளே பெண்மைகொள் கன்னிமையாய்த் துன்னுஞ்சொல் பொருளணியே துளங்குகின்ற - அணிகலய்ைக் கொஞ்சுமொழி பண்ணதுவாய்க் கொள்கவிதைப் பெயர்கொண்டென் நெஞ்சமெனும் கலையரங்கில் நிலைத்தாடும் குமரி,கேள் ! சொல்லடுக்கி வரியமைத்துச் சொல்லிடுவார் ெேயன்றே: கல்லடுக்கும் கொத்தன்செய் கலையறியார் இவர்சில்லோர். 158