பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலை. இளஞ்சேரன் திரு. அரு. இராமநாதன் (ஆசிரியர், காதல்', சென்னை.) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : இமை குவித்து இளமைக் கனவை இன்புறக் காணச் செய்யும் இக் கவிதை சுவை குவிக்கும் பழக் கடையில் சுளேயாய் நிற்கிறது. (ஒ-ம்.) அரு. இராமநாதன். இளமையெனும் பொல்லாய்! குறுமணலிற் சுவரெடுத்துக் கூரை யின்றிக் குழந்தைவீ டமைத்தேகான் ஆடும் போது, குறும்புபல செய்திடினும் என்றன் வாயிற் குமிழெச்சில் தோய்ந்திட்ட வெல்லங் தின்றே 'அறுசுவையில் ஒன்றுகுறை வென்றே என்றன் அங்கையைச் சுவைத்ததையும் கிரப்பிக் கொண்ட, நறுங்காதல் அத்தானின் பேரன் பெல்லாம் நத்தையோ டாகியதே. நானென் செய்தேன் : 26