பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கோவை. இளஞ்சேரன்


எமைக்குவித்து மகிழ்வெள்ளம் மூழ்கச் செய்த
எழில்குவிக்கும் இளமையெனும் பொல்லாய்; சென்றாய் !
சுமைகுவிக்கும் புறக்கடையில் எனக்கு வித்தாய்;
சுவைகுவிக்கும் பழக்கடையிற் சுளையாய் நின்றேன்!
இமைகுவிக்குங் குழந்தைதனக் கிசைத்தா யாக்கி
இதழ்குவிக்கும் இன்பமெலாம் ஓடச் செய்தே
இமைகுவிக்கா இரவளித்தாய்: ஓடிவிட்டாய்:
இளமையதே, உனக்கிடர்தான் நானென் செய்தேன்?


[எண்சீர் ஆசிரிய
விருத்தங்கள். ]








29