பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் திரு. அகிலன் அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : கவிஞர் கோவை. இளஞ்சேரன் தமக்கு மகன் பிறந்த செய்தியைக் கேட்கிருர், கேட்டவுடன் இன்பக்கவிதை சுரக்கிறது.'ஆண் பிறந்தான் எனக் கேட்டால் அமுதெனக்கோர் இனிப் போ ??? எனக் கேட்கிரு.ர். அமுதச்சுவையை இக்கவிதையிலும் சுவைக்கிருேம். சுவையுள் ளதை இரண்டு நிலையிலும் சுவையற்றதாகக் காட்டுவது கவிதையில் புதுமை. (ஒ-ம்.) அகிலன். அமுதமொரு சுவையோ? புன்னைப்பூ முகம்வெளுக்கப் புதர்முல்லை சிரிக்கும்: புதுச்சுனையின் நீர்கறுக்கப் பொந்துத்தேன் நகைக்கும்: பின்னழகைப் பாரென்று மின்னல்மயில் ஆடும்; புன்னகைக்கும் மாளமிட்டுப் புறவினங்கள் கூடும்: தென்னையுச்சி யோலையைத்தன் யாழிசையாய் மீட்டித் தென்றல்வளர் சோலையதில் தெரிவைமட்டும் இல்லை, கன்னியில்லாச் சோலையிலே தென்றலுமோர் குளிரோ : கன்னியவள் அணைத்திருந்தால் தென்றலுமோர் குளிரோ ? 34