பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். தவழ்ந்துவரும் வெள்ளத்தில் மிதந்துவரும் துரையின் தளிர்மென்மைப் பஞ்சணைகள்; தந்தக்காற் கட்டில்: அவிழ்ந்துவரும் முல்லைமணம்; அசைந்துவருங் தென்றல் அருங்கலவைச் சந்தனத்தை அள்ளியள்ளி வீசும்: குவளைக்குள் தீம்பாலோ குடிப்பாயென் றழைக்கும்: குறைவில்லா அவ்வறையில் குமரிமட்டு மில்லை, அவளில்லாப் பள்ளியறை சந்தனமோ கமழும் : அவளிருந்தாற் சந்தனத்தின் மணச்சிறப்போ அவிழும் ? சீரகச்சம் பாவரிசி செழும்பாலிற் பொங்கிச் சிரிக்கின்ற மல்லிகைபோற் சிதறவைத்து, மேலே மோரகன்ற வெண்ணெயிலே முறுகாத பாகை முழுகவிட்ட அமுதமதை உண்ணவழைத் தன்னை "ஊரடங்கிற் றெனவுரைத்தாள் உள்ளறையில் அவளோ, ஊசிபட்ட புழுப்போலக் குழவிபெறத் துடித்தாள்: ஆரணங்கு துடிக்குங்கால் அமுதெனக்கோர் சுவையோ ? "ஆண்பிறந்தான் எனக்கேட்டால் அமுதெனக்கோர் சுவையோ ? (எண்சீர் ஆசிரிய விருத்தங்கள், ! 35