பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். 'நெருப்புக்கு முன்னமர்ந்திட் டெதையோ சொல்லி, நெய்யுணவை விழுங்கிவிட்டுச் சந்த னத்தால் உறுப்பெல்லாம் பூச்சிட்டே ஐய ரங்கே wo - உடல்வியர்வை வழிந்தோடச் சாய்ந்தி ருப்பார்: விருப்பில்லா அவ்வியர்வை விலக்கு தற்கு விரைந்தேக வேண்டாமோ விளம்பாய் என்ருள் 'துருப்பெனவே கைநழுவா விசிறி யங்கு துணையிருக்கு மெனப்பகர்ந்தேன்; துணிந்து சொல்வாள்: வெய்யிலுக்கே உடல்மறைத்து வளம கனக்குள் வேலியென்னும் நோயினெண்ணும் ஒன்ருய்க் கொண்டு பொய்யுடனே வஞ்சகங்தான் பொலிவுக் கென்று பொழுதெல்லாம் அதைங்டத்தும் பணத்தோட் டத்தார் கொய்யாத மலர்போலுங் கொழுமு டற்கே குளிரேற்றப் போகவிடை கொடுப்பாய்' என்ருள் கையடித்தாற் காற்றடிக்கும் மின்சா ரத்தின் காற்றிருக்க ெேயதற்கு வேண்டாம்' என்றேன். 43