பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் மழலை பயிற்றி, மடப்பம் இயற்றி, மயலார் வழக்கில் மதுகை செயிற்றி, அழலே வெயிற்றி, அணங்கைத் துயிற்றி, அழகைக் குயிற்றும் அமைப்பை வியற்றும் அலரும் மலரார் அருமைப் பொழிலாம் அன்னைத் தமிழின் அழகார் முகமே, மலரும் வேனிற் கானல் வரியால் மகிழ்ந்து மலர்ந்து நெகிழ்ந்தே அருளும். தமிழ்ப்பண் பதனைத் தமிழ்ச்சீ ரதனைத் தகுதிக் குரிய தளங்கள் தெரிந்தே கமழப் புரிந்த கவினைப் பீடன்' றெனுஞ்சொல் லீன்றே, வனைந்தான் சான்றே. கிமித்திகக் கயவர் நிகழ்த்திடு மயல்கள் நிலைகுலைந் தழுங்கக் குலைநடுக் குலுங்கத் துமித்தெறி மறவன்; துறவுகொள் அறவன்: துகளறு புலவன்: திகழ்தமிழ் வலவன்.

  • பிடு அன்று ' - என்பது சிலம்பில் கண்ணகி பேச்சு.

62