பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் திருமதி. இந்திரா சோமசுந்தரம் B. Sc., M. Ä., M. Litt., B. T. (ஆங்கில-தமிழ் அகராதித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : தமிழரின் தலைசிறந்த திருநாளாம் தைத்திங்கள் பொங்கலின் வான்சிறப்பினை வண்ணத் தமிழில் வடித்துள்ளார் ஆசிரியர். தண்ணுர்ந்த தைத் திங்களின் எண்ணுர்ந்த ஏற்றமும், பசுந்தமிழின் பண்ணுர்ந்த மாண்பும் பரக்கக் காட்டுவதோடு, வாழ்வாங்கு வாழும் நெறி வகுத்து வையத்திற் கீந்து தமிழினம் மேற்கொண்ட உயர்கொள்கை யையும் வளமுறக் காட்டுகின்றர். (ஒ-ம்.) இந்திரா சோமசுந்தரம். தைத் திங்கள் - தங்கம் எனில் தள்ளித் தண்டமிழை அள்ளுகின்ற துங்க மறத்தமிழர் துன்னும் வளமெல்லாம் எங்கள் தமிழகத்தின் ஏற்றங்காண் என்றவராய்ச் சங்கில் முழக்கமிட்டே, சாலக் களிப்புற்றுப் பொங்கல் எனும்பேர்ப் பொலிவாம் விழாக்கண்டார்; திங்கள் பனிரண்டில் தேர்ந்தெடுத்தார் ை தம்முதலே. 66