பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தி அமைப்பு சார்பொன்று. எக் கவிதையாயினும் ஒரு நற் கருத்தைக் குறிக் கொண்டிருப்பது சிறப்பொன்று. சொல்லணி, பொருளணி, சந்தநடை கொண்டிலங்குவது நன்ருென்று. யாவற்றிற்கும் மணிமுடி போன்ற சிறப்பு ஒவ்வொரு தலைப் பும் ஒவ்வொரு மதிப்புக் கருத்துரையைப் பெற்றிருப்பது. அம் மதிப்புக் கருத்துரைகளின் மூலம் பேராசிரியப் பெரு மக்கள் கவிதை மெருகுக்கு ஒளியூட்டியுளர்; கவிஞர் பெரு மக்கள் பொலிவேற்றியுளர்; சொல்வன்மைச் செம்மல்கள் புகழ் காட்டியுளர்; எழுத்தாளப் பெருந்தகையினர் எழில் படைத்துளர். கவிதைபாலும், கவிஞர்பாலும் பேரன்பு கொண்டு இப்பெருந்தகவினர் மதிப்புக் கருத்துரை வழங்கிச் சிறப்பித்தமைக்கு உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரி வித்து மகிழ்கின்ருேம். இத்தொகுப்பு வெளிவரப் பேரார்வங் கொண்டு தூண்டி உதவியோர் பலர். அவர்களும், நேர்நின்றுதவிய டாக்டர். ப. மு. சொக்கலிங்களுர், திருவாளர்கள் ஆ. நாராயணசாமி அவர்கள், அர. சந்தானகோபாலகிருட்டிணன் அவர்கள், புலவர். ஆ. மகிழ்னன் அவர்கள், புலவர். அ. அறிவொளி அவர்கள், சிவாஜி பேப்பர் ஸ்டோர்சு கே. எம். முத்தழகு அவர்கள் ஆகியோர் எம் உளமார்ந்த நன்றியை ஏற்பார்கள். மறைமலே அச்சகத்தார் திரு. சாமி அவர்கள் மனமகிழ் வுடன் இப்பணியை ஏற்று நிறைவாகச் செய்தார்கள். ஓவியக் கலைஞர் திரு. பா. நடராசனவர்கள் வேண்டியாங்கு மேலட்டையை உருவாக்கினர்கள். நன்றி உரித்தாகுக. தொகுப்பு உங்கள் கையில். கலேப்பெட்டகத்தைத் தந்திருக்கிருேம் என்ற எங்கள் நம்பிக்கை நற்சான்று பெறும். • வணக்கம். சானகி இளஞ்சேரன்.