பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் தையெனுஞ் சொல்லடியால் தைவரல், தைத்திடல், தையலென் சொற்கள் தளிர்த்தன: அவ்வெலாம் கையால் தழுவல், கவிய்ை இணைத்திடல், மொய்குழல் மங்கையாய் மொய்க்கும் பொருள்கண்டு, தையலே இணைத்துத் தழுவும் திருமணத்தைத் தையமை திங்களில் தண்டமிழோர் கூட்டினரே. தைத்திங்கள் நீரோடைத் தண்மை நலமென்ருர்; தைத்திங்கள் தண்ணிய தண்மைக்குச் சான்றகும்: தைத்தென்றல் வீச்சு தனிக்குளிர் இன்பமாம்: தைத்திங்கள் காதல் தழுவல் புதுமையாம்: தைத்திங்கள் இவ்வாறு தக்கபல் லின்பமே தைக்கக்கூத் தாடுவோர் தைதையென் ருடுவரே. (ஆறடித் தரவுக் கொச்சகக் களிப்பாக்கள்.) 63