பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். நீரின் ஒட்டமே நீள்நெறி யாக்கிப் பாரில் அதனைப் பார்த்து நடந்தனர். ஆருய் - வழியாய் அங்கீர் நடத்தலின் யாறென அழைத்தனர்; - ஆறெனும் அ.தே பிளந்திரு பாங்காய்க் கிளர்ந்தோ டுவதுகண் டிடுப்பிடைக் காலின் இருபிரி வென்னத் தொடுத்து, வாய்போல் புழைவழி வழிதலின் "வாய்க்கால் என்றனர்; வார்ந்தோ டுவதை மடுத்தலின் மடை'யென. . மடைவழிப் பாயுநீர் வரம்பாய்க் கிடந்த வரப்'பிடைச் சிறைப்படல் செறு'வென, செய்தொழிற் குற்றதைச் செய்'யென வறுநிலம் நீரால் கழல்தலின் கழல்ர்ே - கழனிர் - கழனி' வையம் தொழிற்படும் கிழமையின் வையல் 'வயல்"என வளத்தொடு வளர்ந்தவர், ஓடுநீர் வழிக்கொண் டேகினர்: ஒடுர்ேக் கெதிரே நீடுநீர்ப் பரப்பது பேரொலி தந்ததால் ஆர்கலி' என்றனர். ஆ. புழை - துளே. 75