பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். ஒப்பில்லா இறையொன்றே அறிவாய் ஒண்பொலிவில் கின்றிலங்கல் அறிந்தும் குப்பைபோல் பலகடவுள் உருவாய்க் குவலயத்தோர் கொள்வதெதன் குறியோ ? துப்பொன்ரும் மெய்விட்டுக் கொடுமைத் தீதாம்பல் பொய்கொண்டு சிறுமைத் தப்பான வழிநடந்து மருளாம் தற்குறியாய்த் தீர்வததன் பொருளாம் : பொலிவுடைய பலபொருள்கள் சுவையாய்ப் பொதிந்திருக்க இயற்கையதில் குவையாய், மலிவுதரும் முகில்கண்டு மயிலே மகிழ்தோகை விரிப்பதெதன் குறியோ ? கலிவுகொண்ட மக்கட்கே வளமாம் கறுவாழ்வை நல்லுரையால் கவின்று வலிமைதரும் அறிஞர்க்கே விழாவாம் வகைசெய்ய அறிவிக்கும் பொருளாம் ! (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள். ) 87