பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கோவை. இளஞ்சேரன்

கவிதைகள் அணிந்துரை

                  கவிஞர், முனைவர் வா. செ. குழந்தைசாமி”


'கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் தமிழறிந்த புலவர் யாப்பிலக்கணம் கற்ற கவிஞர்; தமிழ் மரபு வழி நிற்பவர். மரபுக் கவிதைஎழுதுபவர்கள் யாப்பிலக்கணம் தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழ்க் கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடும், தமிழ்க் கவிதை உலகொடு நெருங்கிய தொடர்பும் உள்ளவர்கள், கவிதை உள்ளம் கொண்டவர்களானால் மரபுவழி நின்று சாவாத கவிதைகள் படைப்பது இயலும்.

 மரபுக் கவிதை, புதுக்கவிதை எனக் கவிதைகளைப் பிரித்து, ஒரு பிரிவை மரபுக் கவிதை என்று கூறுவதே பொருத்தமற்ற செயலாகும். இது உரைநடையை இலக்கண உரைநடை, புதிய உரைநடை எனப் பிரிப்பது போலாகும், அறிவுலகில் நாம் ஈடுபடும் துறை எதுவாயினும் அதற்கு இலக்கணம் உண்டு. கவிதை, உரைநடை, ஓவியம், சிற்பம், இசை, நடனம் எதுவாயினும் அதற்கு இலக்கணம் உண்டு. இந்த இலக்கணம்தான் மரபு. இலக்கணம் நாள்தோறும் வளர்வது; எனவே மாறுவது. மரபுகள் மாறுபவை. சங்ககாலத் தமிழ்க் கவிதைகளிலிருந்து பாரதியார். பாரதிதாசன் காலம் வரை பார்த்தால் தமிழ்க்கவிதை எண்ணற்ற உருவங்கள் எடுத்திருப்பதைக் காணலாம். அதன் உருவம் காலந்தோறும் மாறிவந்

总返旺战skuasá炯细卢总姆略感的树x*M

_

  • துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.

[7]