பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

நம்மை உயர்திணை யாக்கியவள்

நந்தாய் மொழியாந் தமிழன்றோ? செம்மை நிலையில் அவட்பேணல்

GeFusirib நமது கடனன்றோ? 'மும்மைத் தமிழும் ஆள்வோரே

முனைந்து வளர்க்க வேண்டும் என

அம்மை மீதில் ஆணையிட்டே

அறிவித் தியக்க முயன்றிடுவாய்!

94

பிழையில் லாத எழுத்தொலிப்பும்,

பிறழ்வில் லாத எழுத்ததுவும், விழைவாய்த் தமிழைக் கற்பதுவும்

விளங்குந் தமிழ்க்கே தொண்டாகும். புழைவாய்ச் செடியாய்த் தமிழ்வாடப்

புன்மைச் சில்லோர் கீழறுப்பாய் நுழைவார் செயலை "நூக்குதலும்

நுவலுந் கொண்டென் றுணர்வாயே!

95

நூாக்குதல் - சிதைத்தல்

64