பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

அடுத்து வந்தோர் அடாப்பழக்கம்

அவ்வப் படியே கடைப்பிடித்துக் கெடுத்தே விட்டாய் தமிழ்வழக்கே!

கேலிக் கிடமே கொடுத்திட்டாய்! படுத்தல் ஒன்றிற் பணிவதன்றிப்

பணிதல் ஒரும் தமிழ்மகனே! எடுத்தே யுள்ளாய் என்பதன்றிக்

கொடுத்த துண்டோ? இது நன்றோ? 96 திருக்குறள் முழுதுங் கற்றிடலால்

திருந்திய வாழ்வே பெற்றிடலாம்; 'உருப்படி மனிதர் தமிழர்'என்றே

உலகில் திகழக் குறள்துணையாம்; துருப்பிடித் துதிர்ந்த இரும்பென்றே,

துளையிடப் பட்ட எலும்பென்றே, இருப்பது தமிழர் பண்பன்றே:

இனியுந் தாழ்க்கல் இடரன்றோ? 97

(அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்!

65