பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்

"நாடும் மொழியும் நமதிரு கண்களாம்,

ஏடும் பயில்வும் எழில்" • * .

இவற்றைப்போலவே தனித் தமிழ், தமிழ்ப்பற்று, தமிழ்ப் பாதுகாப்பு போன்ற பொருள்கள் பற்றி, புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் கவிதை நூல்பாணியில் பல கவிதைகள் உள்ளன. சில பாடல்கள் கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் கண்டனங்களாக அமைந்தவை.

- இனி, கவிஞர் கோவை இளஞ்சேரனின் பாக்கட்கு வருவோம். பல தலைப்புகளில் உணர்ச்சியும் கருத்தாழமும் நிறைந்த கவிதைகளைப் படைத்துள்ளார்.

காதலும் வீரமும் காவியம் தோன்றிய காலத்திலிருந்து கவிதைப் பொருள்களாக இருந்துவருகின்றன. வீரம் பெரும்பாலும் போர்க்களப் பண்பாகவே இருந்து வந்தது. போர் இன்று போற்றப்படும் செயல் அன்று; புகழப்படும் செயலும் அன்று. காதல் காலமுள்ள வரை தொடரும் ஒன்று. கவிஞர்கோ கோவை இளஞ்சேரனின் கதாநாயகர் ஓர் அற்புதப் பிறவி. அவர், -

"முல்லைக்கு மனமேற்றும் உடலர்; முத்துக்கே ஒளியேற்றும் முறுவர் சொல்லுக்குச் சுவையேற்றும் குரலர் செந்தமிழ்க்குச் சீரேற்றும் எழுத்தர்; நெல்லுக்கு மணியேற்றும் உழைப்பர்;

நேர்மைக்கே அணியேற்றும் நினைப்பர்;
கல்லுக்கும் கலையேற்று பவர்என்
கற்போட்டந் தனில்அவரே கனிவர்."

[9].