பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தமிழகத்தில் புகுந்தமைந்து தமது வாழ்வில்

தழைப்பதற்குத் தக்கசெயல் தழுவி நின்றே அமிழ்தமெனச் சுவைகண்டார் உளரே, காண்க!

அதற்கிடையில் தமிழர்க்கே ஊறு செய்த உமிழ்செயலை நினைக்குங்கால் ஊறும் எண்ணம்

உதைத்தவரைத் திருத்துதற்கே தூண்டுங் கண்டீர்! தமிழ்மொழியிற் பிறமொழியைக் கலப்போர் தம்மின்

தகவின்மை தகர்த்தெறிய வேண்டு மன்றே!

- - |2|

கற்றறிந்த கவினான கருத்தை யெல்லாம்

கழித்தெறிந்து, தன்கசடே கவினாய்க் கொண்டு, புற்றெழுந்த பாம்பெனவே புரிந் தெழுந்து

புன்தொழிலே மிகப்புரிவார், புழுக்கள் அன்னார்; மற்றிவர்க்கு மறையாத பழியால் வாழ்வும்,

மக்களொடு மனையுறவும் மறுப்பாய் நின்று அற்றுவிழுந் துயர்தருங்கால் அமைதி கொள்ளார்;

'அந்தகோ ஈங்கிவர்க்காய் அவலங் கொள்வாம்.

| 22

76.