பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பேரலைகள் சிற்றலையைத் துரத்தி வந்து

பெயர்ந்தேதான் சிற்றலையாய்த் தேய்ந்து மாளும்; வீரரென்போர் ஓய்பவரை வீணே ஓட்டி

வீணாகார்; விழைந்தவர்க்கே உதவி நிற்பார்; சீரமைப்பே வாழ்வதணில் சிறக்க வேண்டின்

சினமின்றி, வன்சொல்லும் சிறிதும் இன்றிப் பாரதனில் பண்புடனே பழகல் வேண்டும்;

பஞ்சைகளைப் பரிந்து நின்று பேண வேண்டும்.

- |25

உற்றவர்க்கே ஓடோடி உதவ வேண்டும்;

உதவிபெற்றே நன்றிமறந் தெதிர்ப்ப ராயின் மற்றவரை மனத்தகற்றி மறக்க வேண்டும்;

மற்றொருகால் உதவியெனில் மதுகை முப்பால் சொற்றகுறள் நன்றாற்றல் உள்ளும் தீய

தவறுண்டாம் அவரவர்தம் பண்பறிந்தே பற்றென்ற* பொருள்நினைவிற் பற்ற வேண்டும்; பழிநேரா தவைகொள்ளப் பரிய வேண்டும்.

| 26

78