பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பெற்றவர்கள் பண்பின்றிப் பேசிக் கொண்டால்,

பிள்ளைகளோ கொச்சைகளாய் ஏசிக் கொள்ளும்; கற்றவர்கள் கடுஞ்சொல்லை வீசிக் கொண்டால்

காண்பவர்கள் கல்லெடுத்து வீசிக் கொள்வர்; கொற்றவர்கள் கையூட்டு கோடி பெற்றால்

கொடுத்தவர்கள் குடிமக்கள் நாடி தேய்ப்பர், முற்றியதே சொத்தையெனில், முளையோ வெம்பல்,

முதல்கோணல் முற்றிலுமே கோண லாகும்!

| 27

நாட்டினிலே நல்லவர்கள் பெருக வேண்டும்;

நல்லவர்கள் சொல்லறிந்து நவில வேண்டும்; நீட்டுகின்ற சொல்லதனில் பண்பி ருந்தால்

நிரம்பைக்கும் இடும்பைக்கும் நிகழ்வே இல்லை. தேட்டவளத் தமிழகத்தில் திகழும் வாழ்வு -

தேர்ந்துசெயும் திறச்செயலால், தேற்ற மாகும். நாட்டமெலாம் நேர்மையிலே நடக்க விட்டு

நாட்டிடுவீர் நற்புகழை! நலமே வாழ்க!

| 28

79