பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

25. கையிலொரு தாலியுடன் வருவேன் கண்ணே!

தலைவன்:

வெப்பத்தால் நலிந்தவனை விலக்கி விட்ட விரைமலர்த்தீம் பொய்கையதைக் கண்டே னில்லை; கப்பியதோர் பசிகொண்டோன் கலங்கி நிற்கக் கனிமரந்தான் தடுத்ததெனக் கேட்டே னில்லை; 'தப்பத்தான் நம்மணத்தைத் தள்ளி வைத்தல்; தவிக்கின்றேன் அறியீரோ என்ற நீயே ஒப்பத்தான் மறுக்கின்றாய் மணத்திற் கின்றே; ஒண்டொடியே, தடையென்ன கண்டாய் கண்னே!

| 36 தலைவி.

அத்தானே! அன்யூறுந் தமிழத் தேனே! 'அடுக்காது சாதிவிட்டுச் சாதி போதல்; செத்திடவா வாழ்ந்திடவா என்றாள் அன்னை; செத்திடுபோ' எனச்சொல்லித் தடைநீக் கிட்டேன்; "சொத்தில்லை, அப்பனில்லை என்றார் தந்தை; சொத்தையுங்கள் பேச்சென்று சொல்லி வைத்தேன்; இத்துணைக்கும் மேலாக என்தாய் மாமன்

எதிர்த்துவந்தார்; எடுத்தெறிந்தே ஏசி விட்டேன்.

I 37

84