பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

26. பறந்தே போ!

மரத்தடியில் தனித்தவனாய்ப் படுத்தி ருந்தேன்; மகிழம்பூ பொலபொலென்றே உதிர்ந்த தங்கே; உரத்ததொரு குரலெடுத்து யார்தான் அங்கே உதிர்த்த தென்றேன்; உருக்காணேன்; சொல்லே கேட்டேன்: “மரத்தடியின் மணவாளா மணமா காத மங்கைநான், பலரணைக்கும் பெண்ணென் றாலும் பரத்தையல்லேன்; ಜ.೩೮, பருவத் தென்கால் பெயரெனக்கு; கவிஞரெலாம் தென்றல் என்பார்’

140 எனக்கூறி முடிக்கவில்லை தழுவி விட்டாள்;

என்னுடலில் இன்பந்தான் ஓடக் கண்டேன்; 'உனக்கெனவே இங்குவந்தேன்; ஆயி னும்யான் உடன்போக வேண்டுமங்கு காத்தி ருப்பான்; கணக்காக நேற்றுமாலை கழறி வந்தேன், 'கட்டாயம் இன்றுமாலை வருவன் என்றே மனக்கவலை கொள்ளாதே விடைகொ' ೧-pri: "மற்றொருவன் யார்'என்றேன்; மாற்றம் ೧೯rari

  • தென்கால் - தெற்கிலிருந்து வீசும் காற்று.

86