பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

மச்சான் பிச்சையும், மருமகன் முருகனும் கச்சூரி லிருந்து கடுகிவந் தடைந்தனர்; சச்சர விலாமலே சளைக்காமல் கவலையாய்

மிச்சங் கண்டிடவே மாடோ டுழைத்தனர்.

'அழுதிட்ட வாழ்க்கையில் அலைந்தோம் பலநாள் பழுதினைப் போக்கியே பெருகுவோம் இனி எனத் தொழுதனர் கடவுளைக் கொளுவினை மாட்டியே

உழுதனர் நிலத்தினை ஊடுருவி ஆழமாய்.

விதைத்தனர்; பறித்தனர். விரைவாய் நட்டனர்; சதைத்தாள் கதிர்கள் சாய்ந்திடும் வேளையில் சிதைத்தது காற்றும், சேர்ந்தது சூரையும்;

பதைத்தனர் விளைந்தது பத்துதான் என்றதும்.

செத்திடா உடலினான் சென்றான் ஐயரிடம்; சொத்தையும் சூரையும் சொக்கிய தென்றான் பத்துக்குக் குறையாமல் பதரெலாம் தூற்றியே,

மொத்தமாய் வரவேண்டும் முழுமையாய் என்றார்.

92

| 54

| 55

156

| 57