பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

29. 'முதலடிதான் பாடுகிறாய்,

எனதருமைக் கருங்குயிலே!

எனைமயக்கும் @ಐಆtuLGo!

உணதருமைக் குரலெடுத்தே

உவகைதரும் பாட்டிசைப்பாய்!

மனதறுத்த அடிமை நிலை

மடிந்துவிட்ட தினியிங்கே;

தனதாட்சித் தொடக்கமெனத்

தலைநிமிர்த்திக் கூவிடுவாய்!

- | 62

வெளிக்கதவைத் திறந்துவைத்தே

வெண்கழுகை விரட்டிவிட்டேன்; களிக்கின்றேன் விடுதலையால்

கவிக்குயிலாய்ப் பறக்கின்றேன்; குளிக்கின்றேன் தன்னுரிமைக்

குளத்தினிலே எனக்குதித்துத் தெளிக்கின்ற முதலடியைத்

தெள்ளமுதாய்க் கூவிடுவாய்!

| 63

94