பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நல்லிசையில் இனிக்கின்ற

நறும்பாட்டால் முதலடிதான் சொல்லுகின்றாய் கருங்குயிலே

செழிப்பெல்லாம் தனதென்னும்

பொல்லாத பருந்துனது

பொந்துக்குள் இருப்பதனை வெல்லுவதால் மற்றடியை

விரித்திடலாம் முயற்சிப்பாய்! -

164

அலுப்பின்றி, உழைப்பின்றி

அடுத்தவனைச் சுரண்டுகின்ற உலுத்தரெனும் கோட்டான்கள்

உன்னகத்தில் வளர்வதனைக் "கழுத்தினிலே கைவைத்துக்

கவிழ்த்துவிட்டேன்’ எனும் இசையை எழுப்புவதே உன்பாட்டின்

இறுதியடி முயற்சிப்பாய்!

|65

(தரவு கொச்சகக்

கலிப்பாக்கள்)

95