பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

31. படைஞர் (இராணுவ ஆட்சி.

சிரித்தனையோ கொல்லைவளர் முல்லாய்! சிக்கடுத்த அரசியலை எண்ணி, விரித்தனையோ இதழ்க்கட்டை முல்லாய்!

விரித்தவலை ஆட்சிதனில் பல்லோர்,

அரித்துவருங் கறையானாய் மாறும்

அதுபொழுதாய்ப் படைஞரவர் ஆட்சி

கறித்தெழுதல் நினைத்தனையோ அல்லால்,

'களுக்கென்றே ஏன்சிரித்தாய் சொல்லாய்!

| 73

படையொருகை, கோலொருகை கொண்டே

படைஞரவர் ஆட்சியெழுந் திட்டால்,

புடைபெயரும் பெருந்தலைகள் சாயம்

'பொள்ளெனவே வெளுப்பதை நி னைந்தோ, தடையதுவும், குடைவதுவும் வீணே

தாக்குவதால் தளர்ந்தபொது மக்கள் தொடைநடுங்கும் நிலைநினைந்தோ முல்லாய்,

தொடர்ந்தவெடிச் சிரிப்புற்றாய், சொல்லாய்!

|74

| 00