பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

சென்றவர் மீள்திசை நோக்கி-உயிர் செல்வதை ஈர்த்துநான் தேக்கிப் பொன்றிடும் வாயினில் உள்ளேன்-துணைப் பேடையே, கண்டாயோ; விள்ளாய்! என்றுனைக் கேட்பது முறுதி-அவட் கிதனைச் சொல்லிதே இறுதி: தென்றமிழ் யாவினும் ஆளும்;-அவள் தெள்ளுடற் கென்னின்பம் மீளும்.

|80

(அடிதோறும் இடையே ஒரசைக்கூன் பெற்ற அறுசீர் விருத்தச் சந்தப் பாட்டு)

so4