பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இதற்கிது பொருளென, அன்றென

இடைமறுப் பெழுதியே நாளெலாம்

பதர்க்கென உழுவதை விட்டுநீர்

பயனுடைச் செயல்களே ஆ ற்றுவீர்!"

'கவிஞர்கோவின் தமிழ்ப்பற்றும், தமிழினப்பற்றும் ஆங் காங்கு கவிதைகள் தோறும் பரவி நிற்கின்றன. தமிழ் மொழி பற்றிய தலைப்புகள் வரும்பொழுது கவிஞர் உணர்ச்சிப் பிழம்பாக ஒளிர்கிறார்:

"நாடித் துடிப்பில் நடக்கும் தலைவி அகம்புறமாய்க் கோடிச் சுவைகள் குவிக்கும் குமரீ குலவிடுசீர்

நாடிப் புரந்தே நலந்தரும் அன்னாய்; தமிழமுதே' பாடிக் களிக்கும் பரிவினன் பணிந்து மகிழ்ந்தனனே!'

பாரதி கவிதையில் மனத்தைப் பறிகொடுக்காத தமிழ னில்லை. பறிகொடுக்காதவன் உணர்வில் தமிழனுமில்லை. 'உணர்ச்சியின் ஊற்றுக்கண்' என்று பாரதியைப் பாடும் இவரே அந்த ஊற்றுக்கண்ணாக மாறி விடுகிறார்:

"முனைகொள் உணர்வில் முகிழ்த்த இவ்வுரை சுளையின் சாறு, சுடர்ப் பொன் வீறு;

永 零 淑 - ஊற்றுக் கண்கள் ஒன்றா, நூறா? மாற்றறி யாத மதர்ப்பூற் றாயிரம்.

米 . 數 冰 -

கவிதைத் தொழிலில் கடைந்த சிலைநீ. செவிக்குச் செந்தமிழ்ச் செந்தேன் ஓடை,

II 2]