பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

வாயூறுஞ் சுவையூற்றாய்,

வளம் ஊறுஞ் சொல்லூற்றாய், வனப்பின் ஊற்றாய்த் தாயூறும் அன்பூற்றாய்த்

தனித்துறுந் தேனூற்றாய்த் தமிழைக் கண்டேம்;

ஆய்வாலும் அகழ்வாலும்

அறிவாலும் உணர்வாலும் அணுகித் தோயும் தோய்வாலும் நூல்படைக்குத்

தொழிலாலுந் திகழ்வன்றித் தொய்வே காணேம்.

|83

இளதுங்கு, கற்புமனை,

இசையாழோ டிளந்தென்றல், இரவு வானம், வளவயல்நெல், மழலைச்சொல்

வழங்குவதை இன்பத்தின் வடிவாய்க் கண்டேம்; உளம் உவக்கும் இவையாவும்

ஒருங்கிணைந்த பேரின்ப ஒலிய தாகிப் புலம் உவக்கப் பொலிகின்ற

பைந்தமிழைப் போல்.உலகிற் புதுமை காணேம்.

... -- | 84

108