பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பழுத்ததமிழ்ச் சொல்லிருக்கப் - பிறமொழிச்சொல் கலப்பதனால் பைந்த மிழ்ச்சொல் வழக்கொழிந்து போகாதோ?

வண்டமிழ்ச்சொல் குறையாதோ? வடவெ ழுத்தை இழுத்திழுத்துக் கலந்தெழுதும்

இழிசெயலைத் தமிழர்களும் இயற்றல் கண்டேம்; கழுத்தறுப்புக் காரர்.இவர்

கைக்கொள்ளும் மொழிக்கொலைவே றெங்குங்

காணேம்! (87

உலகத்தில் முன்னேறி

உயர்ந்துவரும் நாடன்றோ சப்பான் நாடு! பலகலையும் அந்நாட்டார்

பரிவுடனே தாய்மொழியில் பயிறல் கண்டேம்;

அலகில்லாச் சொற்படைத்த

அருந்தமிழே மம்மி"யென்றே அம்மா சொல்வி,

மழலைகளைக் குக்ைகின்ற

மடமைதான் மாறுவதும் என்றோ காணோம்!

| 88

| 10