பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை இளஞ்சேரன்

'அன்புடையான், புலமையினான்,

அருஞ்செயலில் திறனுடையான் என்ப தன்மேல் பண்புடையான் எனச்சொல்லும்

பதிவிற்கே உளமுவக்கும் பரிவைக் கண்டேம்; துன்புடைய சாதிப்பேய்,

தொல்லைதரும் மூடங்கள், துணியாத் தாழ்வு, என்புருக்கும் பண்பின்மை,

ஏழ்மைத்தி இவைநெறியாய் ஏற்கக் காணேம். }95

வைகறையில் இருக்கையிடல்,

விடியல்நூல், காலைக்குளி, பகலி லெல்லாம்

செய்பணிகள், மாலை நடை,

சேர் இரவில் எழுத்து,துயில் செயலாய்க் கண்டேம்;

மெய்யுணர்வும், மேலறிவும்

மிகுதெளிவும் பயன்விளைவும் உடல்ந லத்தோ

டெய்துகின்ற அமைதியதும் -

ஏற்றுகின்ற நெறிப்பயனில் ஏங்கல் காணேம்.

|96

  • இருக்கை - ஆசனம்

| 14