பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

சொல்லாற் றற்குச் சுனையின் ஊற்று; பொல்லாங் கர்க்குப் போர்ப்புயற் காற்று.

- 米 求。 . 杰 தாய்த்தமிழ் உணர்ச்சியில் பூத்த புதுமலர்: பாட்டுணர்ச் சியிலே பதித்தாய் உயிரை: நாட்டுணர்ச் சிக்கோர் நாளத் தண்டு; - * : * 米

சாதித் திமிர்க்குச் சாட்டைச் சவுக்குநீ; 'பொய்மைச் சாத்திரம் புகுந்திடில் மக்கள் பொய்யே யாகிப் புழுஎன மடிவர்' . 'கோத்திரம் பொய்மைக் கூடை” என்றே சாத்திரப் பொய்மை சாய்த்தசம் மட்டிநீ;

※ 冰 ※

பாடல்ஒவ் வொன்றும் ஆடகப் பைம்பொன்; நூல்ஒவ் வொன்றும் நூறுவை ரக்கல்.

岑 案 寧 எழுதுகோல் என்ன மின்னேற்று நாளமோ? எழுத்தெலாம் மின்னலால் சுழித்த சுழிகளோ' என்று அடுக்கிக் கொண்டு போகிறார். உணர்ச்சிகள் ஊற்றாகச் சுரக்கவில்லை. அருவியாகக் கொட்டுகின்றன. தன்னை மறந்து பாடியவை. இன்னொருமுறை அவர் தாமே முயன்றாலும் எழுத இயலாதவை. ஏனெனில் இவை முயன்று எழுதப்பட்டனவல்ல. மூச்சுப்போல பிறந்து வார்த்தைகளாக, வரிகளாக உருப்பெற்றவை.

‘அண்ணா'வுக்குப் பலபரிமானங்கள் உண்டு. சிந்தனை யாளர்; பகுத்தறிவுவாதி; சிறுகதை எழுத்தாளர்; புதினப் படைப்பாளர்; நாடக ஆசிரியர்; தன்னேரிலாத-தமிழகம் முன்னர் கண்டிராத பேச்சாளர், -

| 13]