பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

திரைமறைவுச் செய்திகளைத்

தீங்குதரும் நாற்றத்தைத் திறந்து காட்டி, அறையறையாய் அறிவித்தல்

அருவெறுப்புச் செயலாகி அழிக்கும், கண்டேம்; மறைபொருளாய்த் தாம்செய்த

மாசுகளை மற்றவர்க்கு மலர்த்திக் காட்டி அறைவாரோ? அதற்குமனம்

இசைவாரோ? அப்பணியில் அமைவார் காணேம். 207

“வணக்கம்'என் றுரைப்பதினும்

'வணங்கிமகிழ் கின்றேன்'என் றுரைக்கும் பாங்கில்

இணக்கத்தின் இணங்குகின்ற

இடையேறும் மென்மையொலி இனிதாய்க்

கண்டேம்; கணக்கற்றோர் இத்தொடரின்

கனிவறிந்தும் பணிவறிந்தும், கையும் வாயும் மணக்கும்வகை மேற்கொண்டார்;

மரபளித்தோம் எனும் நிறைவிற் கெல்லை காணேம்

208

| 20