பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கலையெல்லாம் அழகென்றே

கற்பழிக்குங் கடுஞ்செயலுங் கலையாய்க் காட்டி, விலையாக இளைஞர்தம்

வீறெல்லாம் குலைக்கின்ற விளைச்சல் கண்டேம்; மலையெல்லாம் கல்லெனினும்

எரிமலையுங் கற்குழம்பே மலைவாழ் வாமோ? இலையெல்லாம் பசுமையெனில்

பசுமையெலாம் இலையாகும் பான்மை காணேம்.

219

வழிவழியாய் வருகின்ற

வளமார்ந்த பெருஞ்செல்வர், வளமை இல்லார்;

எழில்வழியில் புகழ்பெற்றே

ஏறுவதைக் கீழறுப்பால் இடறல் கண்டேம்;

வழிவழியாய் வளர்கின்ற

. வளமரங்கள் தமைச்சார்ந்து வளர்வ தற்குக்

குழியேறி வருகின்ற

கொடியதனைக் கீழறுப்பாய்க் கொய்யக் கானேம், - 220

! 26