பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பணிப்பத்து

நூற்பணியும் பொதுப்பணியும்

மொழிப்பணியும் இல்லறத்தின் பணியும் ஆக நாற்பணியும் நற்பணியாய்

நாடறிந்து நடத்திடுதல் நலமாம் கண்டேம்; சீர்ப்பணிகள் செய்யுங்கால்

சிறப்புவரும், சிதைவுவரும்; எதுவந் தாலும் ஏற்பணியாய் ஏற்றதனை

எருவாக்கிப் பணிமுடித்தால் இழப்பே காணேம்.

22] வெள்ளிவிழா அகவையினில்

விரும்புதமிழ் ஆசிரியப் பணிமேற் கொண்டு கள்ளவிழா மலர்முகத்து

மாணவர்முன் நின்றக்கால் களிப்பே கண்டேம்; துள்ளியெழும் புலமையுடன்

துணுவுடைய சொல்லாற்றல் துணையாய்க்

கொண்டு, பள்ளியதை இன்பத்தின்

பள்ளியறை யாய்க்கண்டேன்; அதுகா னாதேன்.

222

127