பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

செஞ்சொற்கள், சுவை ஆழம்

சேர்பொருள்கள், குரல்மிடுக்கு, செவிசாய்ப் போரை நெஞ்சத்தால் நோக்கமிடல்,

நெறிமேடை நாகரிகம், நிகழ்ச்சி யாளர்

கிஞ்சிற்றும் குறைபடாமை,

குறிக்கோள்கொள் சொற்பொழிவும் பணியாய்க்

கண்டேம்;

விஞ்சுகுரல், வெற்றளப்பு,

வீண்கதைகள் சொற்பொழிவில் விரித்துக் காணேம். 227

கலப்புமணம் சாதிச்சாக்

கடைபோக்கும்; கரணமின்றிப் பெரியார் கண்ட நலப்பெருஞ்சீர் திருத்தமன

நற்றலைமைப் பணியேற்று, மரபை நன்கு புலப்படுத்தி, நெல்முல்லைப்

பூச்சொரிந்து பலநூறு புரிந்து கண்டேம்; குலப்பெருமை கொண்டு.தமிழ்க்

குடிப்பெருமை குலைத்தபுரா ணத்தீ காணேம்.

228

|30