பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

38. பொதுப் பத்து.

பொதுவாக உலகத்தில்

பொருளியலும் அறிவியலும் பெருகி னாலும் புதுவரவாய் வருபவைகள்

பொல்லாங்காய், ஒழுக்கமிலாப் பொழுது போக்காய் அதிவிரைவாய் வளர்வதுடன்

அறிஞர்கள், அருங்குணத்தார் அடங்கல் கண்டேம் எதுவரையும் இவைசெலுமோ?

என்னமுடி வைத்தருமோ? எல்லை கானேம்.

23|

நெஞ்சத்துள் ஈரத்தை

நிறைத்திருப்பார் நிறைமாந்தர்; நிழல்போல்

வாழ்ந்தும் வஞ்சத்தில் தீங்கெண்ணும்

வன்மனத்தார் செயலெண்ணி வதங்கல் கண்டேம்; பஞ்சிற்கு மென்மையதும், .

பசுமைக்குக் குளுமையதும் பாங்கென் றாலும் வெஞ்சூட்டில் விரைந்தவைகள்

வெந்துகரி யாவதன்றி விளங்கக் காணேம்.

232

| 32