பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கற்பனையின் களஞ்சியங்கள்,

கதையளக்கும் புராணங்கள், கடவுட் பேரால்

விற்பனைக்குக் கடைவிரித்த

வெற்றார்ப்பாய்ச் சமயங்கள், விளங்கக் கண்டேம்:

பொற்புடைய பாக்களினால்

பொலிவுடைய தமிழ்வளத்தைப் பொதிந யத்தைக் கற்பதற்கும் சுவைப்பதற்கும்

கவின்பூச்சில் தரலன்றிக் கடைகால் காணேம்.

235

உருவக்கல் நாட்டாமல்

ஒளிநாட்டிப் புதுக்கோயில் ஒன்று கண்டே கருவறைக்குள் பேரொளியைக் . காட்டிட்ட இராமலிங்க வள்ளல் கண்டேம்; வருமவர்தம் அடியாரோ

வடிவக்கல் வழிபாடும் வைத்துக் கொண்டே கருவறுப்பார் அவர்கருத்தை,

கனவினிலும் அவரடியார் ஆதில் கானேம். 236

134