பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

39. கல்விக் கூடம்

'கல்' என்னும் சொல்லடியே கல்வி யாகும்; கற்பவர்தாம் கூடுவதாற் கூட மாகும் 'பள்'என்னும் சொல்லடியே பள்ளி யாகும்;

பள்ளிகொள்ளக் கூடுவதாற் கூட மன்று. தெள்ளருஞ்சீர் சமணமதத் துறவி யர்தர்ம்

தேர்படிப்பு, படுக்கைக்கும் ஒருகூ டத்தைப் 'பள்ளி'எனக் கொண்டிட்டார்; அந்தப் பாங்கில்

பரவிவழக் கானதுதான் பள்ளிக் கூடம்.

242 குழந்தைக்குத் தாய்மடிதான் கல்விக் கூடம்;

குமரிக்குக் குமரன்தோள் கல்விக் கூடம்; உழந்தோர்க்கோ உழுமுனைதான் கல்விக் கூடம்;

உயர்ந்தோர்க்கோ உலகமதே கல்விக் கூடம்; முந்நாட்கு முன்றானை கல்விக் கூடம்:

முயற்சிக்கு நெஞ்சுரந்தான் கல்விக் கூடம்; இழந்தோர்க்கோ ஆறுதலே கல்விக் கூடம்;

இவற்றிற்கோர் மூலவலம் பள்ளிக் கூடம்.

243

| 39