பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஒழுக்கத்தில் உறைவிடமே கல்விக் கூடம்;

ஒழுக்கமெனும் புள்ளியிலாக் கல்விக் கூடம்; அழுக்குற்ற கூடமதாம் கலவிக் கூடம்

அக்குற்றம் அகன்றுதான் பள்ளிக் கூடம்

இழுக்குற்ற நடைமுறைகள் இயங்கும் கூடம்;

இடைபட்டுத் தடைபட்ட நீரின் ஒடம்; முழுக்குற்றம் கல்வியின்மேல் மூளா வண்ணம்

முனைந்துநின்று காப்பதுதான் நமது பாடம். 244

அன்பூறும் ஊற்றுக்கண் கல்விக் கூடம்

அறிவாறு பாயுமிடம் கல்விக் கூடம்; பண்பூறிப் பழகுமிடம் பள்ளிக் கூடம்,

பயனெல்லாம் விளைவயலாம் பள்ளிக் கூடம். தெம்பூறித் தேங்குமிடம் கல்விக் கூடம்.

தெளிவுக்கோர் பைஞ்சுனைதான் கல்விக் கூடம். என்பேறும் உணர்வூட்டும் பள்ளிக் கூடம்.

எல்லவர்க்கும் வாழ்வுமனை பள்ளிக் கூடம். 5

24

140