பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கலைக்களமாம் கூடமிது கவின்சேர் கூடம்.

கடற்களமாம் புல்லறிவைக் கடக்கும் ஓடம். ೧5Tಣ6)ಹಹ6TITಯೆ இக்கூடம் குலைக்கும் மூடம்.

கொள்களமாம் கூடமிதில் கொழிக்கும் பாடம்.

உலைக்களமாய்ச் சிற்பிகளை வார்க்கும் கூடம்.

உறுகளமாம் புலமைக்கோ இதுகல் லாடம். நிலைக்களமாய் இளமைக்கு நிலைத்த மாடம்.

நீன்களமாய் முதுமைக்கும் நினைவில் ஆடும்.

248

பொதிகைமலைத் தென்றலிங்கு பேச்சாய் வீசும்;

பொன்மலையின் தொழிலிங்கு செயலாய்ப் பேசும்; அதிகைமலை நெல்லியிங்கே அன்பாய்க் கூடும்;

அழகர்மலைத் தெய்வமிங்கே அழகை நாடும்; உதகைமலை ஒடையிங்கே உணர்வாய் நிற்கும்;

உயர்ந்தமலைப் பணியிங்கே உருகக் கற்கும்; மதுகைமலைப் பொன்னியிங்கே அறிவாய்ப் பாயும்;

மலையெல்லாம் இம்மலையால் மலைத்த தாகும்;

249

A 42