பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.

250

காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.

251

(எண்சீர்

ஆசிரிய விருத்தங்கள்)

143