பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

ஆங்கிலத்தில் (T)'டி'யோடு (D)'டி'யாம்

ஆயிரண்டின் ஒலிமாற்றம் அறிந்து தீங்கின்றி உச்சரிப்போம்; அன்றித்

தெருவிளக்குக் கம்பம்போல் (T)'டி'யாம்

வாங்கிவைத்த வில்லு'டீ'(D) என்றே

வழங்கினமோ, உருவத்தைக் கொண்டே? பாங்குற்ற ணகரமொடு னகரம்

நகரத்தோ டொருமூன்றாம் எழுத்தை,

304

மூன்றுசுழி இரண்டுசுழி இந்தென்

றுச்சரித்தோம் சுழிபார்த்த மாடாய்;

ஆன்ற நம தருந்தாய்மை மொழியே

ஆக்கமுற நுணுக்கமறித் துரையோம் தோன்றுபிற மொழிநுணுக்கங் கண்டோம்.

டண்ணகரம், ஹன்னகரம் என்றும்

சான்றமைந்த தந்நகரம் என்றும்

சார்பறிந்து வழங்கல்தமிழ்த் தொண்டாம். 305