பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

என்புருக்கி நோய் நீக்கும் ஒருவன்

எடுப்பான மூலிகையொன் றறிந்தே துன்படக்கிப் பிணிதீர்த்து வந்தான்;

தொலைவில்வாழ் பிணியாளன் ஒருவன்

'அன்பையா! மருந்தெழுதி விடுப்பீர்;

அங்குவர இயலாதேன்' என்றான்; தென்பாங்குத் தமிழெழுத்தின் நுணுக்கம்

தெரியாதான் மருந்தெழுதி விடுத்தான்.

306

முடங்கலதைக் கண்டபிணி யாளன்

முள்கண்ணில் குத்தியதாய் அதிர்ந்தான்; அடங்கவேண்டிந் நோய்'என்று துணிந்தே

அரிவாளைக் கூர்முனையாய்த் தீட்டித் தடங்காணா வைகறையில் ஆற்றின் தண்கரையில் மந்திரத்தை ஒதத் தொடங்கியவர் ஆடாத தலையைத்

துணித்தோடி வந்தில்லம் புகுந்தான்.

307

156