பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

43. அறிக்கை ஒன்று

என்நாட்டுப் பெரியோரே; அன்னை மீரே! ஏறுகளே! மாணவன்மீர்! எளியேன். உங்கள் முன்நாட்டும் அறிக்கையொன்று கொண்டேன்; அஃது முத்தொளியாம் சொத்தையன்று கேளிர், நல்லீர்! பொன்னோட்டில் எழுத்தென்னும் வைரக் கல்லால் பொருள்செதுக்கிப் பேரறிவில் திகழ்ந்த, நந்தம் தென்னாட்டுக் கல்விநிலை கடல லையாய்த்

தேய்கின்ற கதைகேளிர், தேம்பிச் சொல்வேன்!

3} 0

பெற்றெடுத்த தந்தையரே, மைந்தர் தம்மைப் பெரும்பள்ளி தனிற்சேர்த்து விட்டோம்; அன்னார்

கற்றிடுவார்; கற்பிப்பார் என்றே நீவிர் கருத்தின்றி அமையாதீர்! பள்ளி விட்டால் சுற்றுகின்றார் - அலைகின்றார் - திரிகின் றாரால் சுருக்கென்று தைக்கின்ற அன்புச் சொல்லால் மற்றவரை வீடடக்கிப் பயில்நே ரந்தில் மல்லிகைமுன் வண்டெனவே பயில வைப்பீர்!

3| |

|58