பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பள்ளிதனில் ஆசிரியன் பயிற்று விப்பான்; படிப்பிக்கும் வீட்டாசான் பெற்றோ னன்றோ? துள்ளிவரும் சேய் அவனை இன்றெப் பாடம் துவக்கிவைத்தார்; விளக்கதனை என்று: அன்பை அள்ளிவிடும் அன்னையரே! நூம்பால் உண்டே அறுசுவையாம் கடிவாளம்; அதனைக் கொண்டே தெள்ளுகல்வி வண்டியில்இக் குதிரை பூட்டிக் கொள்.உண்ணப் பின்செய்வீர்; கொழித்து வாழ்வான். - 312

படிக்கின்ற மாணவர்க்குத் தோழர் காள்:நீர் படிப்புணர்ந்தோர் ஆயிடினும், ஊரின் மூலை முடுக்கெல்லாம் பதம்’பார்ப்போ ராயி னும்கண் முகம்மறைக்கும் இரவுவரின் நண்பன் தன்பால் வெடுக்கென்று போய்ப்படிபோ என்றே சாற்றி வெருட்டிடுவீர் விளையாட்டு நேரம் வந்தால், துடுக்காய்ச்சென் றிழுத்துவந்து தழுவி நின்றே

தோழனுக்கு நல்லவனாய்த் தோள்கொ டுப்பீர்!

- 3| 3

I 59